வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தஞ்சையில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென பின்னே திரும்பி தன்னுடைய உதவியாளரை நோக்கி ''எங்கே பரசுராமன்? எருமை மாடாடா நீ... பேப்பர் எங்க...'' எனக் கடிந்து பேசினார். பொதுநிகழ்ச்சியில் உதவியாளரை தரக்குறைவாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.