அஸ்ஸாமில் லேசான நிலநடுக்கம்! பீதியில் மக்கள்

அஸ்ஸாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் இன்று (நவ. 14) பிற்பகல் 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் தகவலின்படி, பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆகப் பதிவாகியுள்ளது. திடீர் நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பீதியடைந்த நிலையில், இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி

✕
✕