மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் வான்வெளி மூடப்பட்டதை அடுத்து, பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 5 வரை சுமார் 10,341 இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சுமார் 10.79 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்; ஏப்ரல் 5 அன்று மட்டும் 284 விமானங்கள் இயக்கப்படவில்லை. இந்த நெருக்கடி நிலையிலும் சுமார் 73 லட்சம் பயணிகள் இந்தியாவிற்குப் பயணம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.