ராஸ் பனிப்பாறைக்கு அடியில் நுண்ணுயிரிகள்

அண்டார்டிகாவின் ராஸ் பனிப்பாறைக்கு அடியில் சூரிய ஒளி இல்லாமல் வாழும் தனித்துவமான நுண்ணுயிர் சமூகங்களை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பாக்டீரியா, ஆர்க்கியா மற்றும் வைரஸ்கள் சூரிய ஒளிக்குப் பதிலாக அம்மோனியம், நைட்ரைட், சல்பர் போன்ற வேதியியல் சேர்மங்களைப் பயன்படுத்தி வேதியியற் சேர்க்கை மூலம் உயிர்வாழ்கின்றன. இக்கண்டுபிடிப்பு பிற கோள்களில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் புரிந்துகொள்ள உதவும்.

தொடர்புடைய செய்தி