மியாமி ஓபன் டென்னிஸ்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜானிக் சின்னர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிச்சுற்று போட்டியில் நம்பர் 2 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சின்னர், செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதுகிறார்.

தொடர்புடைய செய்தி