ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்.16) இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.