மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கு கண்டனம் தெரிவித்து, மதுரை மாவட்ட திமுக கூட்டணி கட்சியினர் இன்று (நவ.21) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் நேற்று (நவ.20) ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இன்று காலை 9 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாவட்ட அவைத் தலைவர்கள் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியம், மா.ஒச்சுபாலு, நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
நன்றி: நியூஸ்18