FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது அவரது 6-வது உலகக் கோப்பை பங்கேற்பு ஆகும். இருப்பினும், கடந்த மேஜர் லீக் சாக்கர் போட்டியில் இண்டர் மியாமி அணிக்காக விளையாடியபோது, மெஸ்ஸிக்கு இடது தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அதிக பணிச்சுமை காரணமாக தசைப்பிடிப்பு மற்றும் சோர்வு கண்டறியப்பட்டது. இதனால் அவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.