சென்னையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் (டிச. 14) நிறைவடைகிறது. உரிமம் பெறும் நடைமுறையை விரைவுபடுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சியால் அக்டோபர் 3-ஆம் தேதி இணையதள சேவை தொடங்கப்பட்டது. இந்தக் காலக்கெடுவுக்குள் உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுவது கண்டறியப்பட்டால், அதன் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஏற்கெனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.