அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நீதிமன்றம், குழந்தைகளின் மனநல பாதிப்புக்கு காரணமாக இருந்ததாக கூறி சமூக வலைதள நிறுவனமான மெட்டா (Meta) ரூ.567 மில்லியன் (சுமார்) செலுத்த உத்தரவிட்டுள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மனநல பாதிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையின் ஒரு பகுதி குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.