மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (நவ., 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.