மேகதாது அணை கட்டும் திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அவர் இன்று (நவ.14) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து கர்நாடகாவில் அணைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும். இந்த அணை கட்டப்பட்டால் தமிழக காவிரி நெற்களஞ்சிய விவசாயம், குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும்” என எடுத்துக்கூறினார்.