மேகதாது அணை விவகாரம்.. சட்ட நடவடிக்கை எடுக்க CM விஜய் உத்தரவு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய், இன்று (மே.25) காவிரி நதிநீர் வல்லுநர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் நீர்வரத்து உரிமையை பாதுகாக்கும் வகையில், மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அனைத்து சட்ட வழிகளிலும் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி