மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (பிப்.6) மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இதுவரை 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில டிஜிபி ஐ நோங்ராங் தெரிவித்துள்ளார். சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் அதேவேளையில், சட்டவிரோத சுரங்க செயல்பாடுகள் குறித்த விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.