முதல்வர் வைகோ சந்திப்பு. ஆழ்வார்பேட்டை இல்லத்தில்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துள்ளார். அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதலமைச்சரை சந்தித்த அவர் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எம்பி பதவிக்காலம் நிறைவடைந்தபிறகு, முதன்முறையாக முதலமைச்சரை, வைகோ சந்தித்துள்ளார். 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக வைகோ பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: Kalaignarnews

தொடர்புடைய செய்தி