திருவள்ளூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 15) அன்புமணியின் தலைமையில் நடைபெறுகிறது. ராமதாஸ் - அன்புமணி இடையே தலைவர் பதவி தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் சூழலில் நடக்கும் இக்கூட்டம் செல்லாது என ராமதாஸின் ஆதரவாளர் & பாமக MLA அருள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இருப்பது தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும். அவரே தெய்வம். அவரின் சொல்படி நடப்போம். அவரின் தலைமையில் நடக்கும் கூட்டமே செல்லுபடியாகும்" என தெரிவித்தார்.