மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு.. அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

“மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா தொடர்பான வழக்கில், குடமுழுக்கு கல்வெட்டில் அறங்காவலர் குழுவினரின் பெயர்கள் இடம்பெற வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி அறங்காவலர் குழுத் தலைவராக உள்ள நிலையில், குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி