மருத்துவ படிப்புகள்: புதிய கட்டணங்களை அறிவித்த தமிழக அரசு

தமிழக அரசு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. அதில் விடுதி, உணவு, போக்குவரத்து மற்றும் இதர கட்டணங்கள் என 4 பிரிவுகளில் கட்டண வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவு கட்டணம் ரூ.70,000 முதல் ரூ.1.35 லட்சம் வரையிலும், போக்குவரத்து கட்டணம் ரூ.50,000 முதல் ரூ.1.75 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர கட்டணம் ரூ.36,000 முதல் ரூ.3 லட்சம் வரை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பல் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணங்கள் சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி