பானிபூரி, தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று கட்டாயம்

சென்னையில் பானிபூரி, தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு உரிமம் பெற வேண்டியது அவசியம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். விற்பனை செய்பவருக்கு தோல் தொடர்பான பிரச்சினை ஏதேனும் உள்ளதா என்பது போன்றவற்றை மருத்துவ குழுவினர் பரிசோதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி