இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (MBBS, BDS உள்ளிட்ட) முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களுக்கான இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கால அட்டவணைப்படி பதிவு மற்றும் விருப்பத் தேர்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.