எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 13) பகல் 12 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடையும். 20ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 21ஆம் தேதி அறிவிக்கப்படும். மாணவர்கள் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆணைகளை பதிவிறக்கம் செய்து, 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.