சைலண்ட் மோடில் மேயர் பிரியா.. முதலமைச்சரை இன்னும் சந்திக்கவில்லை?

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்று 10 நாட்கள் ஆகியும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் அவரை நேரில் சந்திக்கவில்லை. இதனால் தலைமைச் செயலகத்திற்கும் (ஜார்ஜ் கோட்டை) மாநகராட்சிக்கும் (ரிப்பன் மாளிகை) இடையே மோதல் நிலவுவதாக சந்தேகிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் திமுகவின் 153 கவுன்சிலர்கள் இருந்தும், ஆட்சி அமைந்ததிலிருந்து திமுக கவுன்சிலர்கள் அமைதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி