அமீர் இயக்கிய ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் பிப்.1-ம் தேதி வெளியாக உள்ளதை முன்னிட்டு, நடிகை லைலா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அப்படத்தின் வசனமான “நான் உன்னை மறக்கவும் மாட்டேன், நினைக்காமல் இருக்கவும் மாட்டேன்” என்பதை குறிப்பிட்டு தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். தனித்துவமான காதல் கதைக்காக இன்றும் ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி:PT