பிலிப்பைன்ஸில் பயங்கர தீ விபத்து: 1,000 வீடுகள் எரிந்து சாம்பல்

பிலிப்பைன்ஸ் நாட்டின் போங்கோ டவுன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. பலத்த காற்றின் காரணமாக தீ பரவியதால் அப்பகுதியே தீப்பிழம்பாக காட்சியளித்த நிலையில், பாதுகாப்பு படையினர் மக்களை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்கவைத்துள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், மீட்பு பணிகள் மற்றும் சேதங்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

நன்றி:TACC

தொடர்புடைய செய்தி