தனியார் படகுகள் நிறுத்தும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் தனியார் படகுகள் நிறுத்தி வைக்கப்படும் கொட்டகையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு வெடித்தபோது அதிலிருந்து வெளியான தீப்பொறி கொட்டகையில் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஒதியஞ்சாலை போலீசார் தெரிவித்துள்ளனர். தீ மளமளவெனப் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்தில் படகுகள் மற்றும் பொருட்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி

✕
✕