ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தேவி நகரில் குல்பி ஐஸ் தயாரிப்பதற்காக பால் காய்ச்சியபோது, அங்கிருந்த மின்சார வாகனத்தின் பேட்டரி வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையின் உரிமையாளர்களான பவன்லால் மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகிய இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து உடல்களை மீட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி:தந்தி