காஞ்சிபுரம்: இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் கார்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் ஆலையில் இன்று (மே.31) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நன்றி: பாலிமர்