ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளியில் குண்டு வெடிப்பு.. 42 மாணவர்கள் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளி வளாகம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 42 குழந்தைகள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் உள்ள கல்வி மையம் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. காயமடைந்த குழந்தைகள் 9 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஐ.நா. தெரிவித்துள்ளது. கையெறி குண்டு வீசப்பட்டதால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. .

தொடர்புடைய செய்தி

✕
✕