முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா வரும் பிப்., 21-ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு சிறப்பு பூஜைகள், குடவருவாயில் தீபாராதனை, வெற்றிவேர், தங்க, வெள்ளி, பச்சை நிற சப்பரங்களில் சுவாமி வீதி உலா, மற்றும் மார்ச் 2-ஆம் தேதி தேரோட்டம், மார்ச் 3-ஆம் தேதி தெப்ப உற்சவம் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும்.