திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா இன்று (பிப்., 21) கொடியேற்றத்துடன் மிக விமர்சையாகத் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா மார்ச் மாதம் 4ஆம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. 2ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பர்.

தொடர்புடைய செய்தி