திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புகழ்பெற்ற மாசி திருவிழா இன்று (பிப்.21) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 12 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த திருவிழாவையொட்டி கோயில் வளாகமே களைகட்டியுள்ளது.
நன்றி:PT