தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வேகமெடுக்க தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என்ற கோரிக்கையை எழுப்பியிருந்தது. இந்நிலையில், “கூட்டணி ஆட்சியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உடன்பாடில்லை” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும்" என்றார்.
நன்றி: நியூஸ்18