பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனும் காதலித்து வருவதாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் என்றும் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த வதந்திகளுக்கு அனிருத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "திருமணமா? ஹாஹா.. கொஞ்சம் அமைதியா இருங்க நண்பர்களே.. ப்ளீஸ் வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.