சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்களை பற்றி, ஜாய் கிரிசில்டா கருத்து தெரிவிக்கக் கூடாது என மாதம்பட்டி பாகசாலா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்தான விசாரணை இன்று (நவ.25) நடைபெற்றது. அப்போது, ஜாய் கிரிசில்டாவின் வலைதள பதிவால் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் வாதம் வைத்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நன்றி: குமுதம்