மாரிமுத்து மரணம் என்னை நிலைகுலையச் செய்தது! - வேல ராமமூர்த்தி

நடிகர் மாரிமுத்து மறைந்த செய்தியை கேட்டு எனக்கு உயிரே போய்விட்டது என நடிகர் வேல ராமமூர்த்தி தெரிவித்தார். சென்னையில் நேற்று நடந்த 'விராயி மக்கள்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மாரிமுத்துவின் மரணம் என்னை நிலைகுலையச் செய்தது. மாரிமுத்து மிக அற்புதமான நடிகர். அவர் நடித்த கடைசி திரைப்படம் இது என்றார். 'எதிர்நீச்சல்' சீரியலில் ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்தார். அவரது மறைவுக்கு பிறகு ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி