அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேலின் கணவர் நீக்கம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை, மரகதம் குமரவேல் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் உள்பட 3 மாஜி MLA-க்கள் தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், ராஜினாமா செய்த மரகதம் குமரவேலின் கணவர் தையூர் குமரவேல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக கட்டுப்பாட்டை மீறி களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி