சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி ஜெயராமை போலீசார் கைது செய்துள்ளனர். ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்தியதாக பூவைஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஏடிஜிபியை கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போது ஜெயராம் கைது செய்யப்பட்டுள்ளார்.