கோவை மாவட்டம், கொடிசியா அருகே We The Leaders Foundation சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. இதில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உறுப்பினர்களாக இணைந்தனர். கடந்த 5ஆம் தேதி அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்த நிலையில், தற்போது வரை 17 லட்சத்து 67 ஆயிரத்து 879 பேர் இணைந்துள்ளனர். திண்டுக்கல், சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.