போராக மாற்ற பலரும் முயற்சிக்கின்றனர்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் சண்டையை பலரும் போராக மாற்ற முயற்சிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் கூறும் போது, "பயங்கரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து கொள்கிறேன். ராணுவ தாக்குதலை வரவேற்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மே. 10) சென்னையில் நடைபெறும் பேரணியில் விசிக-வை சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி