மங்காத்தா 2: அர்ஜுன் கொடுத்த அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்படும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான இப்படம், அஜித்தின் 50-வது படமாக பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராகிவிட்டதாகவும், ஆனால் சில காரணங்களால் தாமதமாவதாகவும் நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக கூடிய சீக்கிரம் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி