மணிசங்கர் அய்யர் அரசியல் வரலாறு

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர், தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே காருகுடி கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டவர். இவர் லாகூரில் 10-04-1941ல் பிறந்தார். 1963-இல் இந்திய வெளியுறவுத் துறையில் இணைந்து 26 ஆண்டுகள் பணியாற்றிய இவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் இருந்தார். 1989-இல் அரசியலில் களமிறங்கிய அவர், மயிலாடுதுறை தொகுதியில் 3 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕