மாம்பழமே இல்லாத ‘மாம்பழ ஜூஸ்’.. வைரல் வீடியோ

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் ஜூஸ் என்றால் அது மாம்பழ ஜூஸ் தான். அதனை செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு பேக் செய்யும் வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ளது. மாம்பழ ஜூஸ் தயாராகும் ஆலையில் எடுக்கப்பட்ட வீடியோவில், மாம்பழத்தைப் போன்ற மஞ்சள் நிறம் வரவைத்து செயற்கையான திரவத்தைக் கலந்து அதில் இனிப்புச் சுவைக்காக சர்க்கரையை கலக்கின்றனர். இறுதியாக அதை பிளாஸ்டிக் பேப்பர் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

நன்றி: yourbrownasmr

தொடர்புடைய செய்தி