மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை பகல் 12 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி பா. சுப்பிரமணியத்திடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதை தொடர்ந்து வரும் 10ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்பட இருக்கிறது.