மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் 3 பேரும், கூட்டணியில் உள்ள மநீமவுக்கு ஒரு சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் போட்டியிடுகின்றனர்.
நன்றி: News Tamil 24x7