காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் சுட்டுப்பிடிப்பு

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற ஹரி என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இந்நிலையில், பிடிக்க முயன்றபோது உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை ஹரி கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதனால், தற்காப்புகாக ஹரியின் கால் முட்டிக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி