உத்தர பிரதேசத்தில் வீசிய கடுமையான சூறாவளிக் காற்றுக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த நன்ஹே மியான் என்பவர் புயலில் இருந்து தப்பிக்கத் திருமண மண்டபத் தகரத்தைப் பிடித்துள்ளார். அப்போது சூறாவளி காற்றால் தகரத்துடன் அவரும் காற்றில் 300 மீட்டர் வரை தூக்கி வீசப்பட்டார். எலும்பு முறிவுகளுடன் உயிர் தப்பிய அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் வீடியோ வைரலாகிறது.