உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர், "அடுத்ததாகத் தங்கையையும் என்னையும் கொல்ல வேண்டும்" என வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, தங்கையைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.