மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் நேற்று (நவ.10) குணுபுடி ஸ்ரீனிவாஸ் என்ற நபர் தனது தாய் மற்றும் தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்ததில், "தனது தாயும் தம்பியும் மனிதர்களே அல்ல அவர்கள் பேய்கள். அதனால் தான் அவர்களை கொன்றேன். 18 ஆண்டுகளாக அவர்கள் என்னை தின்றுகொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை கொன்றாலும் அவர்கள் திரும்ப உயிருடன் வருவார்கள்" என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.