யானைக்கு பழம் கொடுத்தவருக்கு ரூ.10,000 அபராதம்

காட்டு யானைக்கு பழம் கொடுத்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சாலையில் நடந்து சென்ற காட்டு யானைக்கு வாழைப்பம் கொடுத்த முதியவருக்கு வனத்துறை அபாராதம் விதித்துள்ளது. அவர், காரில் இருந்து இறங்கிச் சென்று ஆபத்தை உணராமல் பழம் கொடுத்துள்ளார். வன விலங்குகளுக்கு உணவளிப்பது குற்றம் என அதிகாரிகள் முதியவருக்கு எடுத்துரைத்ததோடு, இனி இது போல் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி