ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விவசாயி சிவக்குமார் என்பவர் காருடன் விழுந்துள்ளார். இதனைப் பார்த்த மீன்பிடித் தொழிலாளி ஒருவர், கிணற்றில் விழுந்தவரை மீட்க முயன்றுள்ளார். அப்போது அவரும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறந்தவர்களின் சடலங்களை மீட்டனர். தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.